நடிக்க வந்ததால் மருத்துவராக வேண்டும் என்ற கனவு கலைந்தது-நிக்கி கல்ராணி
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

நடிக்க வந்ததால் மருத்துவராக வேண்டும் என்ற கனவு கலைந்தது-நிக்கி கல்ராணி

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிக்கி கல்ராணி, தான் நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.

நிக்கி கல்ராணி தமிழ்ப்பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘நெருப்புடா’ படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடி யாக நடித்துள்ளார். அந்த அனுபவம் பற்றி கூறுகிறார்...

“இதுபோன்ற படங்களில் இதுவரை நடித்ததில்லை. ‘நெருப்புடா’ படத்தில் ‘ரிஸ்க்‘ எடுத்து நடித்தேன். இதில் மருத்துவ கல்லூரி மாணவியாக வருகிறேன். நான் டாக்டர் ஆகவேண்டும் என்பது என் அம்மாவின் ஆசை. எனக்கும் அந்த ஆசை இருந்தது. எனவே அறிவியல் பாடம் எடுத்து படித்தேன். ஆனால் சினிமா வுக்கு வந்து விட்டேன். நான் நடிகை ஆவேன் என்று முதலில் நினைக்கவில்லை.

  ‘நெருப்புடா’ படத்தில் நடிக்கும் போது விக்ரம் பிரபு பற்றி நேரில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மரியாதையாக அன்பாக பழகுவார். அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார். அமைதியானவர்.

பலரும் நடிக்க தயங்கும் கதைகளை நான் தேர்வு செய்வேன். அதுபோன்ற படங்களில் நடித்து வெற்றி பெற்று இருக்கிறேன். என் மனதுக்கு பிடித்த சவாலான கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். இப்போது நான் ‘ஹர ஹர மகாதேவகி’, ‘பக்கா’ படங்களில் நடிக்கிறேன். எல்லா படங்களுமே வித்தியாசமா னவை.

தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். ரசிகர்கள் அன்பும், பாராட்டும், ஆதரவும் எனக்கு இந்த இடத்தை கொடுத்து இரு க்கிறது” என்றார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment