‘அர்ஜுன் ரெட்டி’ நாயகி தமிழில் அறிமுகமாகிறார்
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

‘அர்ஜுன் ரெட்டி’ நாயகி தமிழில் அறிமுகமாகிறார்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் தற்போது தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் நாயகி ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்.

தற்போது தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தின் நாயகனாக விஜய் தேவரகொண்டாவும், கதாநாய கியாக ஷாலினி பாண்டேவும் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவே தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் நாயகியான ஷாலினி, ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற '100% லவ்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமானார். இதன் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் கதாநாய கியாக முதலில் லாவண்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஒக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருந்த வேளையில், திகதிகள் பிரச்சினை காரணமாக லாவண்யா திரிபாதி படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது  'அர்ஜுன் ரெட்டி' படத்தின் நாயகி ஷாலினி பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷுடன் இணைவதன் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் ஷாலினி பாண்டே. இப்படத்திற்கு '100% காதல்' என பெயரிடப்பட்டுள்ளது. எம்.எம்.சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். லண்டனில் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

2011-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் தெலுங்கில் வெளியான '100% லவ்' படம் சூப்பர் ஹிட்டானது. அப்படத்தின் ரீமேக்காக ‘100% காதல்’ உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment