அ.தி.மு.க.வில் இணைகிறார் பாக்கியராஜ்
Current Time: GMT+5:30 Login
◄ பிணைமுறி மோசடி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு ► ◄ தமிழர்கள் விரும்பாத தீர்வை அவர்கள் மீது திணிக்கமுடியாது-முதல்வர் விக்கி தெரிவிப்பு ► ◄ உயர்நீதிமன்றிடம் ஏன் விளக்கம் கோரினேன்? அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம் ► ◄ அமைச்சரவையிலிருந்து வெளிநடப்பு செய்த ஜனாதிபதி-முற்றுகிறதா முறுகல்? ► ◄ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளராக கோத்தா ►

அ.தி.மு.க.வில் இணைகிறார் பாக்கியராஜ்

நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் அ.தி.மு.க.வில் இணையப் போவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழக அரசியல் களம் பல அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சசிகலா சிறைக்குச் சென்றதால், அவர் சார்பில் டிடிவி தினகரன் அ.தி.மு.க.வில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

மேலும் ட்விட்டரில் கருத்துகளைக் கூறிவந்த கமல்ஹாசன், திடீரென அரசியலில் குதித்தார். பல வருடங்களாக அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினியும் திடீரென அரசியலில் இறங்கியுள்ளார். விஷாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இயக்குநர் மற்றும் நடிகரான கே.பாக்யராஜும் அரசியலில் குதிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். தனியார் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘‘அரசியலில் இறங்கினால் அ.தி.மு.க.வில் இணைவேன் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இன்று சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் அவரின் பக்தனாக, கட்சியை வீழ்ச்சியடைய விடாமல் இருக்க தன்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன் என்றும் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment