விக்கரம் பிரபுவிற்கு புதிய பட்டம்
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

விக்கரம் பிரபுவிற்கு புதிய பட்டம்

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘பக்கா’ படத்தில், அவருக்கு புதிய பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
 
சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெற்றது. அதன்பிறகு 9 படங்கள் விக்ரம் பிரபு நடிப்பில் ரிலீஸாகின. ஆனால், ஒரு படம் கூட ஓடவில்லை.
 
இந்நிலையில், எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் ‘பக்கா’ என்ற படத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. நிக்கி கல்ரானி, பிந்து மாதவி என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ‘வீரத் திலகம்’ எனப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. விக்ரம் பிரபுவின் தாத்தாவான சிவாஜி ‘நடிகர் திலகம்’ என்றும், அப்பா பிரபுவுக்கு ‘இளைய திலகம்’ என்றும் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment