சினிமாவில் நிறைய வசதிகளை அனுபவிக்கிறாராம் அனுஷ்கா
Current Time: GMT+5:30 Login
◄ அரசுடன் தொடர்வதா இல்லையா? சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோர முடிவு ► ◄ அவசரகால சட்டம் நீக்கம் ► ◄ ஜெனிவா தீர்மான நடைமுறைக்கு மாற்றுவழி -அமெரிக்காவிடம் வலியுறுத்த வோஷிங்டன் பறந்தார் சுமந்திரன் ► ◄ ஐ.நா மனித உரிமை ஆணையாளரை இலங்கை பிரதிநிதிகள் சந்திக்கும் முயற்சி தோல்வி ► ◄ 2015 ஆம் ஆண்டு பிரேரணையை நிறைவேற்ற இலங்கை எதனையும் செய்யவில்லை-யஸ்மின் சூக்கா குற்றச்சாட்டு ►

சினிமாவில் நிறைய வசதிகளை அனுபவிக்கிறாராம் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா சமீபகாலமாக தனது கருத்துக்களை வெளிப்படையாக சொல்லி வருகிறார். பிரபாஸுடன் காதல் என்ற பிரச்னையிலும் அவர் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக, ‘எங்கள் இருவருக்கும் காதல் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் ரசிகர்கள் அதை ஏற்க மறுத்து இருவரும் சினிமாவில் ஜோடியாக இணைவதுபோல் வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவொருபுறம் இருந்தாலும் நடிகைகளின் வாழ்க்கைபற்றி அனுஷ்கா வெளிப்படையாக பேசினார்.

அவர் கூறியது: இந்த காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்திருக்கிறது. அதுபோல்தான் நடிப்பும் ஒரு தொழில். நிறுவனங்களில் பெண்கள் வேலை செய்வதுபோல் படங்களில் நாங்கள் பணியாற்றுகிறோம். ஆனால் இது மிகவும் சிறப்பானது. சினிமாவை ரசிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள். இதில் நடிகையாக இருப்பது பெருமை.

கைநிறைய சம்பளம் வருவது மட்டுமல்லாமல் நிறைய வசதிகளும் இங்கு அனுபவிக்கிறேன். எல்லா வேலைகளிலும் கஷ்ட நஷ்டம் இருப்பதுபோல் நடிகர்-நடிகைகளுக்கும் அது இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு நிலைக்கு உயர்ந்து விட்டால் நடிகைகளை ராணி மாதிரி பார்த்துக்கொள்வார்கள். எங்கள் பேச்சுக்கும் மதிப்பு இருக்கும். நாங்கள் என்ன சொல்கிறோம் என்று கவனமாக கேட்பார்கள். இதைவிட சிறந்த வேலை வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறினார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment