வதந்திக்கு முற்றுப்புள்ளிவைத்த கவுதமி
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

வதந்திக்கு முற்றுப்புள்ளிவைத்த கவுதமி

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `வர்மா' படத்தின் மூலம் கவுதமியின் மகள் சினிமாவில் அறிமுகமாவதாக வெளியான தகவல் குறித்து கவுதமி விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தற்போது தமிழில் உருவாகி வருகிறது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை பாலா இயக்கி வருகிறார். `வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் நாயகி தேர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில், துருவ் ஜோடியாக கவுதமியின் மகள் சுப்புலட்சுமி தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. தற்போது அந்த தகவல் குறித்து நடிகை கவுதமி விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து கவுதமி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

எனது மகள் சுப்புலட்சுமி, சினிமாவில் அறிமுகமாகவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதில் உண்மை இல்லை. சுப்புலட்சுமி தற்போது அவளது மேற்படிப்பில் பிசியாகிவிட்டார். எனவே தற்போது படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை, உங்கள் அன்புக்கு நன்றி இவ்வாறு கூறியிருக்கிறார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment