இம்சை அரசன் 24ம் புலிகேசி – 2ல் நடிக்க முடியாது-வடிவேலு கடிதம்
Current Time: GMT+5:30 Login
◄ தென்மராட்சியில் ரவுடி கும்பல் விடிய விடிய அட்டகாசம்-மக்கள் அச்சத்தில் ► ◄ வடக்கு,கிழக்கில் அரச நிர்வாகம் முடக்கம்-சுமந்திரன் எச்சரிக்கை ► ◄ இரணைதீவை விடுவிக்க கோரி பேரணி ► ◄ அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்க ஜனாதிபதி வலியுறுத்து ► ◄ யாழில். மக்களின் உடம்பில் ஓடுவது சிங்கள குருதியாம் ►

இம்சை அரசன் 24ம் புலிகேசி – 2ல் நடிக்க முடியாது-வடிவேலு கடிதம்

இம்சை அரசன் 24ம் புலிகேசி – 2ல் நடிக்க முடியாது என்று நடிகா் வடிவேலு நடிகா் சங்கத்திற்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளாா்.

இம்சை அரசன் 24ம் புலிகேசி – 2 இயக்குநா் ஷங்கா் தயாரிப்பில் உருவாக்கப்பட இருந்தது. இந்த படத்தில் நடிகா் வடிவேலு நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு மாறாக வடிவேலு அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக தயாரிப்பாளா் சங்கத்தில் படக்குழு சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து நடிகா் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நடிகா் சங்கம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த கடிதத்திற்கு விளக்கம் அளித்த வடிவேலு, 2016 டிசம்பா் மாதத்திற்குள் இந்த படத்திற்கான பணிகள் முடிவடைந்து விடும். அதுவரையில் வேறு படங்களில் நடிக்க வேண்டாம் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால் 2016 டிசம்பா் மாதம் வரை படத்திற்கான தொடக்கப்பணிகள் ஆரம்பமாகவில்லை.

கலைத்துறை மற்றும் நடிகா் சங்கத்தின் நலன் கருதி ஒப்பந்த காலத்திற்கு பின்னரும் அந்த படத்தில் நடித்து வந்தேன். எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடிகா் சங்கத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தால் எனக்கு பொருள் செலவும் மனவேதனையும் அதிகாித்துள்ளது. எனவே இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன்.

இந்த படத்தில் நடித்தால் வேறு படங்களுக்கான பணியில் பாதிப்பு ஏற்படும். மேலும் நடிகா் சங்கம் என்னை அழைத்து என் தரப்பு வாதங்களை கேட்காமல் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளது ஒருதலைப் பட்சமானது என்று அவா் தொிவித்துள்ளாா்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment