சட்டக்கல்லூரிக்கு மாணவர்கள் அனுமதியை அதிகரிக்கும் யோசனை பிரதமரால் முன்வைப்பு
Current Time: GMT+5:30 Login
◄ எவரையும் உதாசீனம் செய்யவில்லை அனைவருடனும் பேசத் தயார்-சம்பந்தன் ► ◄ காணாமற் போனோர் பணியகத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க ஆலோசனை ► ◄ கேப்பாபுலவில் மக்களின் காணிகளிலிருந்து வெளியேறுகிறது இராணுவம் ► ◄ மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வினால் பிரிவினைவாதம் ஏற்படாது-கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ► ◄ சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்ப உதவி வழங்கப்படும்-ஜனாதிபதியிடம் ஐ.நா செயலர் உறுதியளிப்பு ►

சட்டக்கல்லூரிக்கு மாணவர்கள் அனுமதியை அதிகரிக்கும் யோசனை பிரதமரால் முன்வைப்பு

இலங்கை சட்டக் கல்­லூ­ரிக்கு அனு­ம­திக்­கப்­படும் மாண­வர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கும் யோச­னை­யொன்றை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்­துள்ளார்.

தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சர் என்ற வகையில் பிர­த­ம­ருக்கு இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் விடுத்­தி­ருந்த கோரிக்­கைக்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே மேற்­படி முன்­மொ­ழிவு பிர­தமர் அலு­வ­ல­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் சனத்­தொ­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் இலங்­கை­யி­லுள்ள சட்­டத்­த­ர­ணி­களின் எண்­ணிக்கை குறைந்­த­ள­வாக காணப்­ப­டு­வ­தாக பிர­தமர் அலு­வ­லகம் முன்­னெ­டுத்த பகுப்­பாய்­வு­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இதனைத் தொடர்ந்தே மேற்­கு­றித்த முன்­மொ­ழிவு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

சட்டக் கல்­லூ­ரிக்கு உள்­ளீர்க்­கப்­படும் மாண­வர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பதன் மூலம் நாட்டில் நிலவும் சட்­டத்­த­ர­ணிகள் பற்­றாக்­கு­றையை நிவர்த்­திக்க முடியும் எனவும், சட்­டத்­துக்கு கட்­டுப்­படும் சமூக கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வதை உறு­திப்­ப­டுத்த முடியும் எனவும் மேற்­கு­றித்த முன்­மொ­ழிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

உயர் வெட்டுப் புள்ளி முறை­மையும் வரை­ய­றுக்­கப்­பட்ட சட்டக் கல்வி வாய்ப்­புக்­க­ளுமே இலங்­கையில் சட்­டத்­த­ர­ணிகள் பற்­றாக்­கு­றைக்கு காரணம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

உயர் வெட்டுப் புள்ளி முறைமை கார­ண­மாக 8,432 மாண­வர்கள் அரச சட்டக் கல்­லூ­ரியில் நுழையும் வாய்ப்பை இழந்­துள்­ள­தா­கவும், 5,135 மாண­வர்கள் குறி த்த துறைக்கு விண்­ணப்­பித்­தி­ருந்தும் வெறும் 239 மாண­வர்­களே நுழைவு தகு­தியை பெற்­றுள்­ள­தா­கவும் 2016 ஆம் ஆண்­டுக்­கான புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

மேலும் பல சட்டக் கல்­லூ­ரி­களை புதி­தாக நிர்­மா­ணித்தல், சட்டக் கல்­வி­யுடன் தொடர்­பான பல்­வேறு பாடத்­திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­துதல் என்­ப­வற்­று டன் இலங்கை பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சட்டக் கல்விப் பரீட்சைகளை நடாத்துதல் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் மேற்பார்வையில் சட்டக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துதல் என்பன குறித்தும் இம்முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment