695 நாட்களே ஜனாதிபதி பதவியிலிருக்க முடியும்- கபே அமைப்பு தெரிவிப்பு
Current Time: GMT+5:30 Login
◄ பிணைமுறி மோசடி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு ► ◄ தமிழர்கள் விரும்பாத தீர்வை அவர்கள் மீது திணிக்கமுடியாது-முதல்வர் விக்கி தெரிவிப்பு ► ◄ உயர்நீதிமன்றிடம் ஏன் விளக்கம் கோரினேன்? அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம் ► ◄ அமைச்சரவையிலிருந்து வெளிநடப்பு செய்த ஜனாதிபதி-முற்றுகிறதா முறுகல்? ► ◄ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளராக கோத்தா ►

695 நாட்களே ஜனாதிபதி பதவியிலிருக்க முடியும்- கபே அமைப்பு தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னமும் 695 நாட்களே பதவியில் இருக்க முடியும் என்று சுதந்திரமான, நீதியான தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நேற்று கபே சார்பில் முன்னிலையான சட்டவாளர், கிரிஷ்மல் வர்ணசூரிய,

”அரசியலமைப்பின் 30.1 பிரிவு மற்றும் 19 ஆவது திருத்தம் என்பனவற்றின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 ஆண்டுகளே பதவி வகிக்க முடியும்.

அரசியலமைப்பின் படி, அவரது பதவிக்காலம், வரும் 2019 டிசெம்பர் 8ஆம் நாளுடன் முடிவடைகிறது.

பதவிக்காலம் முடிவடைவதில் இருந்து 30 நாட்களுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.

ஐந்து ஆண்டு பதவிக்காலத்தில் 1099 நாட்களை ஜனாதிபதி ஏற்கனவே கடந்து விட்டார். அவர் இன்னமும் 695 நாட்களே பதவியில் இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment