எவராலும் எம்மை அசைக்க முடியாது-செப்ரெம்பர் 11 நினைவஞ்சலி நிகழ்வில் ட்ரம்ப் உரை
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

எவராலும் எம்மை அசைக்க முடியாது-செப்ரெம்பர் 11 நினைவஞ்சலி நிகழ்வில் ட்ரம்ப் உரை

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் நினைவு தினத்தில் கலந்து கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடி யாது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தில் செயல்பட்டு வந்த உலக வர்த்தக மையத்தின் மீது செப்ரெம்பர் 11ஆ‌ம் திக‌தி அல்-கொய்தா தீவிரவாதிகள் வர்த்தக மையம் மீது விமானங்கள் மோதி தகர்த்ததில் 3,000 பேர் கொல்லப்பட்டனர். 6,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். உலகில் உள்ள எந்த சக்தியா லும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

இரட்டை கோபுர தாக்குதலில் தீவிரவாதிகளுடன் துணிச்சலாக சண்டையிட்ட பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் வீரத்தை டிரம்ப் நினைவு கூர்ந்தா ர்.  இதில் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளும் முதல் இரட்டை கோபுர தாக்குதலுக்கான அஞ்சலி நிகழ்ச்சி இது என்பது குறி ப்பிடத்தக்கது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment