வரலாற்றில் மோசமான வேதனையை அனுபவிக்கும் அமெரிக்கா-வடகொரியா எச்சரிக்கை
Current Time: GMT+5:30 Login
◄ ஜின்தோட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான கண்டனைப்பிரேரணை ஒத்திவைப்பு ► ◄ உள்ளுராட்சி தேர்தல் பிற்போடும்நிலைமை தொடர்பில் கட்சிகள் அதிருப்தி ► ◄ உயர்நீதிமன்றின் இடைக்கால தடை தொடர்பாக மகிந்த தேசப்பிரிய கருத்து தெரிவிக்க மறுப்பு ► ◄ கூட்டமைப்பிலிருந்து பிரிவதென்ற சுரேஷின் கருத்திற்கு பதிலளிக்க மாவை மறுப்பு ► ◄ பிரபாவின் பாதையில் பயணிக்கவே வடக்கு அரசியல்வாதிகள் முயற்சியாம்-ஜாதிக ஹெல உறுமய கூறுகிறது ►

வரலாற்றில் மோசமான வேதனையை அனுபவிக்கும் அமெரிக்கா-வடகொரியா எச்சரிக்கை

ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையின் புதிய தடையை முற்றாக நிராகரித்துள்ள வடகொரியா அமெரிக்கா இந்த தடைகளிற்காக ஒருபோதும் அனுபவித்திராத வேதனையை அனுபவிக்கவேண்டி வரும் என எச்சரித்துள்ளது.

ஐக்கியநாடுகளிற்கான வடகொரிய தூதுவர் ஹன் டே சொங் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையின் சட்டவிரோதமான தடைகளை எனது அரசாங்கம் முற்றுமழுதாக நிராகரிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பொருளாதார அரசியல் மற்றும் இராணுவமோதல்களிற்காக துடிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இறுதியான வழிமுறையொன்றை பயன்படுத்த தயாராகவுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் வடகொரியா எடுக்கவுள்ள நடவடிக்கைகள் காரண மாக அமெரிக்கா தனது வரலாற்றில் மோசமான வேதனையை அனுபவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment