அமெரிக்க கலிபோர்னியாவில் மண்சரிவில் சிக்கி 17 பேர் பலி -பலர் மாயம்
Current Time: GMT+5:30 Login
◄ பிணைமுறி மோசடி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு ► ◄ தமிழர்கள் விரும்பாத தீர்வை அவர்கள் மீது திணிக்கமுடியாது-முதல்வர் விக்கி தெரிவிப்பு ► ◄ உயர்நீதிமன்றிடம் ஏன் விளக்கம் கோரினேன்? அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம் ► ◄ அமைச்சரவையிலிருந்து வெளிநடப்பு செய்த ஜனாதிபதி-முற்றுகிறதா முறுகல்? ► ◄ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளராக கோத்தா ►

அமெரிக்க கலிபோர்னியாவில் மண்சரிவில் சிக்கி 17 பேர் பலி -பலர் மாயம்

அமொிக்காவின் கலிபோா்னியா மாகாணத்தில் ஏற்பட்ட கடும் மண் சாிவில் சிக்கி 17 போ் உயிாிழந்தனா். மேலும் பலரை காணவில்லை என்று தொிவிக்க ப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியா மாகாணத்தில், மான்டிசிட்டோப் பகுதியில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டது. அந்த மண் சரிவினால் கலிபோர்னியா மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சிக்கி 17 பேர்வரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் மண்சரிவு குறித்து மாகாண நிர்வாகம் தொிவிக்கையில், 'இந்த மண்சரிவு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பார்க்கும்போது, உலகப் போர் நடந்த களம் போன்று உள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது' என்று தெரிவித்துள்ளது.

சாலையில் இருந்த கார்கள் மற்றும் வீடுகள், மணலுக்கடியில் சிக்கியுள்ளன. கடுமையான மழையின் காரணமாகத்தான் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment