இராஜதந்திர முயற்சிகளின்போது தாக்குதல்கள் இடம்பெறாது-ட்ரம்ப் உறுதியளிப்பு
Current Time: GMT+5:30 Login
◄ அரசுடன் தொடர்வதா இல்லையா? சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோர முடிவு ► ◄ அவசரகால சட்டம் நீக்கம் ► ◄ ஜெனிவா தீர்மான நடைமுறைக்கு மாற்றுவழி -அமெரிக்காவிடம் வலியுறுத்த வோஷிங்டன் பறந்தார் சுமந்திரன் ► ◄ ஐ.நா மனித உரிமை ஆணையாளரை இலங்கை பிரதிநிதிகள் சந்திக்கும் முயற்சி தோல்வி ► ◄ 2015 ஆம் ஆண்டு பிரேரணையை நிறைவேற்ற இலங்கை எதனையும் செய்யவில்லை-யஸ்மின் சூக்கா குற்றச்சாட்டு ►

இராஜதந்திர முயற்சிகளின்போது தாக்குதல்கள் இடம்பெறாது-ட்ரம்ப் உறுதியளிப்பு

இராஜதந்திர முயற்சிகள் இடம்பெறும்போது வடகொரியாவிற்கு எதிராக இராணுவநடவடிக்கைகள் குறித்து சிந்திக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தென்கொரிய ஜனாதிபதிக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்.

தென்கொரிய ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலின் போதே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

வடகொரியாவுடன் பொருத்தமான தருணத்தில் உரிய சூழ்நிலைகளின் கீழ் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயார் என டிரம்ப் இந்த தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதேவேளை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் தனது நிர்வாகம் வடகொரியாவிற்கு எதிராக விமானதாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது என்ற செய்திகளை நிராகரித்துள்ளார்
வலிமையூடாக சமாதானத்தை ஏற்படுத்தப்போகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment