ஜப்பானில் போத்தல்களுக்குள் தொப்புள் கொடியுடன் அடைக்கப்பட்ட குழந்தைகள்
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

ஜப்பானில் போத்தல்களுக்குள் தொப்புள் கொடியுடன் அடைக்கப்பட்ட குழந்தைகள்

ஜப்பானில் வீடு புதுப்பிக்கும் பணியின் போது தரைக்கு அடியில் கண்ணாடி போத்தல்களுக்குள் இருந்த குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் வீடு ஒன்றை புதுப்பிக்கும் பணி நடந்துள்ளது. இந்த வீடு கடந்த 3 வருடங்களாக யாரும் பயன்படுத்தாத நிலையில் இருந்துள்ளது. மருத்துவரிடம் இருந்த வீட்டை சமீபத்தில் ஒருவர் வாங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.

வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பணியாளா்கள் வீட்டின் அடிப்பகுதியில் 4 கண்ணாடி போத்தல்களை எடுத்துள்ளனர். அந்த போத்தல்களில் குழந்தைகளின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அதில் தொப்புள் கொடிகள் இருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் புதிய உரிமையாளர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் வேதிப்பொருள் பயன்படுத்தி குழந்தையின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாக தொியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ஜப்பான் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது..


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment