சீனாவில் முதியவரின் வயிற்றிலிருந்து 100 மீன் முட்கள் அகற்றப்பட்டன
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

சீனாவில் முதியவரின் வயிற்றிலிருந்து 100 மீன் முட்கள் அகற்றப்பட்டன

சீனாவில் 69 வயதான முதியவர் வயிற்றில் படிந்திருந்த 100-க்கும் மேற்பட்ட மீன் எலும்புகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவருக்கு அடி வயிற்றில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

உடனே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கான் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது அடி வயிற்றில் குடல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மீன் எலும்புகள் (மீன் முட்கள்) படிந்து இருப்பது தெரிய வந்தது.

எனவே ஊசி போன்று இருந்த 100-க்கும் மேற்பட்ட மீன் எலும்புகளை ஆசன வாய் வழியாக மருத்துவர்கள் அகற்றினர்.

சில நாட்களுக்கு முன்பு இந்த முதியவர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் கெண்டை மீன் உணவு பரிமாறப்பட்டது. அதை விரும்பி சாப்பிடும் அவர் மீனின் சதைப்பகுதி மற்றும் எலும்புகள் அனைத்தையும் அப்படியே விழுங்கி விட்டார்.

அதில் எலும்புகள் (முட்கள்) ஜீரணம் ஆகாமல் அப்படியே வயிற்றின் அடிவயிறு குடல் பகுதியில் தங்கி விட்டது. தற்போது அகற்றிய எலும்புகள் தவிர மேலும் சில எலும்புகள் அகற்றப்படாமல் உள்ளன. குடல் பகுதியில் வீக்கம் இருப்பதால் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீதமுள்ள எலும்புகளை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment