கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்து விடுபட்டது கவுட்டா நகரம்
Current Time: GMT+5:30 Login
◄ தென்மராட்சியில் ரவுடி கும்பல் விடிய விடிய அட்டகாசம்-மக்கள் அச்சத்தில் ► ◄ வடக்கு,கிழக்கில் அரச நிர்வாகம் முடக்கம்-சுமந்திரன் எச்சரிக்கை ► ◄ இரணைதீவை விடுவிக்க கோரி பேரணி ► ◄ அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்க ஜனாதிபதி வலியுறுத்து ► ◄ யாழில். மக்களின் உடம்பில் ஓடுவது சிங்கள குருதியாம் ►

கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்து விடுபட்டது கவுட்டா நகரம்

கிளர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கியிருந்த கவுட்டா நகரத்தை அரசுப் படைகள் முழுமையாக கைப்பற்றி விட்டதாக சிரிய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரிய படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அங்குள்ள சுமார் 4 லட்சம் பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியேறி விட்ட நிலையில் இருதரப்பினருக்கும் இடையிலான மோதல்களில் சுமார் 1700 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிழக்கு கவுட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாக இருந்த கவுட்டா நகரத்தை அரசுப் படைகள் முழுமையாக கைப்பற்றி விட்டதாகவும், அங்கு பதுங்கி இருந்த அரசு எதிர்ப்பாளர்கள் அனைவரும், ஒழிக்கப்பட்டதாகவும், விரட்டியடிக்கப்பட்டதாகவும் சிரியா அரசு நேற்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சிரியாவின் அரசு தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடையே பேசிய சிரிய ராணுவ செய்தி தொடர்பாளர், டமாஸ்கஸ் நகரின் புறநகரான கிழக்கு கவுட்டாவுக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் பயங்கரவாதத்தில் இருந்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment