ஆப்கனில் சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் 10 பேர் பலி
Current Time: GMT+5:30 Login
◄ தென்மராட்சியில் ரவுடி கும்பல் விடிய விடிய அட்டகாசம்-மக்கள் அச்சத்தில் ► ◄ வடக்கு,கிழக்கில் அரச நிர்வாகம் முடக்கம்-சுமந்திரன் எச்சரிக்கை ► ◄ இரணைதீவை விடுவிக்க கோரி பேரணி ► ◄ அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்க ஜனாதிபதி வலியுறுத்து ► ◄ யாழில். மக்களின் உடம்பில் ஓடுவது சிங்கள குருதியாம் ►

ஆப்கனில் சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் 10 பேர் பலி

ஆப்கனில் இரு சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் நேற்று நடத்திய தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கில் உள்ள கன்ஸி மாகாணத்துக்குட்பட்ட ஜக்ஹாட்டு மாவட்டத்தில் உள்ள இரு சோதனைச்சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நேற்று அதிகாலை நடத்திய தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்தனர்.

அடுத்ததாக, ஜலாலாபாத் என்ற பகுதியில் உள்ள நன்கர்ஹார் பல்கலைக்கழகத்தின் அருகே காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் நேற்று பிற்பகல் பணிக்கு இடையே தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment