கத்தியை காட்டி மிரட்டியதால் மயங்கி வீழ்ந்த மாணவிகள்
Current Time: GMT+5:30 Login
◄ எவரையும் உதாசீனம் செய்யவில்லை அனைவருடனும் பேசத் தயார்-சம்பந்தன் ► ◄ காணாமற் போனோர் பணியகத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க ஆலோசனை ► ◄ கேப்பாபுலவில் மக்களின் காணிகளிலிருந்து வெளியேறுகிறது இராணுவம் ► ◄ மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வினால் பிரிவினைவாதம் ஏற்படாது-கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ► ◄ சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்ப உதவி வழங்கப்படும்-ஜனாதிபதியிடம் ஐ.நா செயலர் உறுதியளிப்பு ►

கத்தியை காட்டி மிரட்டியதால் மயங்கி வீழ்ந்த மாணவிகள்

மஸ்கெலிய, காட்டுமஸ்கெலியா தோட்டம் லெங்கா பிரிவில், இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதால், அம்மாணவிகள் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனரெனவும் பிரதேச மக்களின் உதவியுடன் அவர்கள் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் எட்டு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

கறுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருந்த இருவரே, இவ்வாறு மாணவிகளை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இவர்களில் இரு மாணவிகள் இன்னும் மயக்கநிலையிலிருந்து மீளவில்லை என்றும் இவர்களை தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்தி வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment