சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்

சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால் பிற்காலத்தில் அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு புதிய ஆய்வு முடிவு கூறு கிறது.

இஸ்ரேலின் பென் கூரியன் பலகலைக்கழக பேராசிரியர் எய்யால் ஷெய்னெர் தனது ஆய்வில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 18 வயதுக்குட்பட்ட வர்களில், நாளமில்லா சுரப்பிகள் மற்றும் வளர்சிதை மாற்றமடைதலில், பிரசவ திகதிக்கு முன்னதாக சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு பாதி ப்புகள் அதிகமாக உள்ளதாக கண்டறிந்துள்ளார்.

மேலும் பென் கூரியனின் ஆய்வாளர்கள், சிசேரியன் மூலம் பிறந்த 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு முதல் நிலை நீரிழிவு நோய் அதிகமாக உள்ள தாக கண்டறிந்துள்ளனர்.

பிரசவ திகதிக்கு இரண்டு வாரங்கள் முன்பு அல்லது அதற்கு முன்னதாக சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தால், குழந்தை வளரும் போது நீரிழிவு நோய் வரு வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. மேலும் அவர்கள் இளம் வயதில் அகால மரணமடைய வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு முடி வுகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் வெளியாகும் ’அமெரிக்கன் ஜேர்னர்ல் ஒப் அப்ஸ்டெட்ரிக்ஸ் அண்ட் கயனகாலஜி’ பத்திரிகையில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment