அதிகளவில் தக்காளி சாப்பிடுவது நல்லதா?
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

அதிகளவில் தக்காளி சாப்பிடுவது நல்லதா?

தக்காளி சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் அதுவே அதிகளவில் எடுத்துக் கொண்டால் உடலில் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் அசிட், வயிற்றில் அதிக காஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும்.

அடிக்கடி தக்காளியை சாப்பிட்டால் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சினையை உருவாக்கும்.

கிட்னி தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், பொட்டாசியம் நிறைந்த தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது கிட்னியின் செயற்பாடுகளை குறைத்துவிடும்.

டயேரியா பாதிப்பு இருப்பவர்கள், உணவில் தக்காளியை சேர்க்கக் கூடாது. ஏனெனில் அது டயேரியாவை ஏற்படுத்தும் சால்மோனெல்லா பக்டீரியாவின் வளர்ச்சியை தூண்டிவிடும்.

தக்காளியில் அதிக அளவு லைகோபென் உள்ளது. எனவே அதிகமாக தக்காளியை சேர்த்துக் கொண்டால், சருமத்தில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.

அசிட் நிறைந்த உணவு வகையில் ஒன்றான தக்காளியை அதிகம் சாப்பிட்டால், சிறுநீர்ப்பையில் தொற்றை உண்டாக்கும்.

தக்காளியில் அல்கலாய்ட் அதிகம் உள்ளது, எனவே உடலில் கல்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தி, எலும்புகளில் தேய்மானம் மற்றும் வலியை உண்டா கும்.

தக்காளி ஒற்றைத் தலைவலி பிரச்சினையை உண்டாக்கும். எனவே ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment