முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை அணி சார்பில் முத்தொடர் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள வீரர்கள் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் கலந்துகொள்ளவுள்ள முத்தொடர் போட்டிகள் பங்களாதேஷ் டாக்கா மைதானத்தில் எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்குள் அணித்தலைவரை தெரிவு செய்வதில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.இதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் ஒருநாள் போட்டிகளின் அணித்தலைவராக மீண்டும் அஞ்சலோ மத்யுஸ் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக டினேஷ் சந்திமல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்..

இதனடிப்படையில் நடைபெறவுள்ள முத்தொடருக்கான அணியில் அஞ்சலோ மத்தியூஸ், உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குஷல் மெண்டிஸ், டினேஸ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, அசேல குணவர்தன, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், துஷ்மந்த சாமிர, ஷெஹான் மதுசங்க, அகில தனஞ்சய, லக்ஷன் சந்தகன், வனிது ஹசரங்க ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment