ஏழு பற்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை
Current Time: GMT+5:30 Login
◄ ஜின்தோட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான கண்டனைப்பிரேரணை ஒத்திவைப்பு ► ◄ உள்ளுராட்சி தேர்தல் பிற்போடும்நிலைமை தொடர்பில் கட்சிகள் அதிருப்தி ► ◄ உயர்நீதிமன்றின் இடைக்கால தடை தொடர்பாக மகிந்த தேசப்பிரிய கருத்து தெரிவிக்க மறுப்பு ► ◄ கூட்டமைப்பிலிருந்து பிரிவதென்ற சுரேஷின் கருத்திற்கு பதிலளிக்க மாவை மறுப்பு ► ◄ பிரபாவின் பாதையில் பயணிக்கவே வடக்கு அரசியல்வாதிகள் முயற்சியாம்-ஜாதிக ஹெல உறுமய கூறுகிறது ►

ஏழு பற்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை

பிறக்கும்போதே ஏழு பற்களுடன் பிறந்த ஓர் ஆண் குழந்தையின் பற்களை குஜராத்தில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

தற்போது அந்தக் குழந்தை நலமுடன் இருப்பதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் மீத் ராமாத்ரி கூறியுள்ளார்.

அந்தப் பற்கள் உறுதியாக இல்லாதது மட்டுமன்றி, அவற்றில் ஒன்று உடைந்த நிலையிலும் இருந்தது. ஒருவேளை, அந்தப் பல் உடைந்து, குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிக்கொண்டால், அது அவனுக்கு உயிராபத்தை விளைவிக்கும் என்பதால் அவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.

இரண்டு கட்டமாக நடைபெற்ற அறுவை சிகிச்சையில் முதலில் நான்கு பற்களும் பின்னர் மூன்று பற்களும் அகற்றப்பட்டன.

அந்தக் குழந்தை பிறந்த சில நாட்களில், அவனுக்குப் பாலூட்டுவதில் சிரமம் இருப்பதாக அவன் பெற்றோர் மருத்துவரிடம் கொண்டு சென்றபோது, அவனது வாயில் வெள்ளை நிறத் திசுக்கள் இருப்பதை மருத்துவர் கண்டறிந்தார்.

அதன்பின் அந்தக் குழந்தையைப் பரிசோதித்த ராமாத்ரி, அந்தத் திசுக்கள் பற்களே என்பதை உறுதி செய்தார்.

"சில நேரங்களில் பற்களின் முனைகள் மட்டும் வெளியில் தெரியும். ஆனால், இந்தக் குழந்தைக்கு அந்தப் பற்கள் அனைத்தும் முழுமையாக முளைத்தே விட்டன. இது வழக்கத்தைவிடவும் சற்று முன்னரே நடந்துவிட்ட சாதாரண உயிரியல் நிகழ்வுதான்," என்று அவர் கூறினார்.

தற்போது அக்குழந்தைக்கு நன்றாகப் பாலூட்ட முடிந்ததாலும், பிற்காலத்தில் அவனுக்கு அந்த இடங்களில் பற்கள் முளைப்பதில் இந்த அறுவை சிகிச்சை யால் ஏதேனும் பாதிப்பு வருமா என்பதைக் கூறுவது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment