உலகில் மிகவும் நீளமான கால்களை கொண்ட பெண்ணாக ரஷ்ய யுவதி கின்னஸில் இடம்பிடிப்பு
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

உலகில் மிகவும் நீளமான கால்களை கொண்ட பெண்ணாக ரஷ்ய யுவதி கின்னஸில் இடம்பிடிப்பு

ரஷ்­யாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் உலகில் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண்­ணாக விளங்­கு­கிறார்.

29 வய­தான எக்­கெத்­த­ரினா லிசினா எனும் இந்த யவதி 6 அடி 9 அங்­குலம் உய­ர­மா­னவர்.

இவரின் கால்கள் ஒவ்­வொன்­றி­னதும் நீளம் 52.2 அங்­கு­லங்கள் (132.8 சென்­ரி­மீற்றர்) ஆகும்.

எக்­கெத்­த­ரினா லிசினா, மிக உய­ர­மா­ன­வர்­களைக் கொண்ட குடும்­பத்தைச் சேர்ந்­தவர். அவரின் சகோ­தரர் 6 அடி 6 அங்­குலம் உய­ர­மா­னவர்.

அவரின் தந்தை 6 அடி 5 அங்­குலம் உய­ர­மா­னவர். தாய் 6 அடி 1 ஒரு அங்­குலம் உய­ர­மா­னவர்.

கூடைப்­பந்­தாட்ட விளை­யாட்டு வீராங்­க­னை­யான எக்­கெத்­த­ரினா லிசினா, 2008 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடை­பெற்ற ஒலிம்பிக் கூடைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் ரஷ்­யாவின் சார்பில் பங்­கு­பற்­றினார்.

அப்­போட்­டி­களில் ரஷ்ய அணி வெள்ளிப் பதக்­கத்தை வென்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

மொட­லா­கவும் பணி­யாற்­றிய எக்­கெத்­த­ரினா லிசினா, ஏற்க­னவே உலகில் மொடலிங் துறை­யி­லுள்ள மிக உய­ர­மான பெண்­ணாக விளங்­கினார்.

தற்­போது உலகின் மிக நீள­மான கால்­களைக் கொண்ட பெண்­ணாக கின்னஸ் சாதனை நூல் வெளி­யீட்­டா­ளர்­களால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ளார்.

எனினும், தற்­போது உயிர்­வாழும் உலகின் மிக உய­ர­மான பெண் எக்­கெத்­த­ரினா லிசினா அல்லர். சீனாவைச் சேர்ந்த சுன் ஃபாங் எனும் 7 அடி 3 அங்­குல உய­ர­மான பெண்ணே தற்­போது உலகின் மிக உய­ர­மான பெண்­ணாவார்.

ஆனால், கால்­களின் நீளத்தைப் பொறுத்­த­வரை, எக்­கெத்­த­ரினா லிசி­னாவே சாத­னை­யா­ள­ராக விளங்கு­கிறார்.

பிறக்­கும் ­போதே தனது கால்கள் நீள­மாக இருந்­த­தாக லிசினா கூறு­கிறார். 16 வயதில் சக வகுப்பு மாண­வி­க­ளை­ விட மிக உய­ர­மா­ன­வ­ராக அவர் விளங்­கினார்.

மிக உய­ர­மா­ன­வ­ராக இருந்­ததால் பாட­சா­லையில் மாண­வர்­களின் கேலி­க­ளுக்கும் வெருட்டல்களுக்கும் தான் ஆளானதாகவும் ஆனால், தேவையான போது அவர்களை எதிர்கொள்வதற்காக தனது சகோதரனை தான் அழைத்ததாகவும் எக்கெத்தரினா லிசினா தெரிவித்துள்ளார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment