டென்மார்க் தலைநகரில் உலகிலேயே விலை உயர்ந்த மது போத்தல் கொள்ளை
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

டென்மார்க் தலைநகரில் உலகிலேயே விலை உயர்ந்த மது போத்தல் கொள்ளை

டென்மார்க் தலை நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வோட்கா மது போத்தல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹகனில் பிரையன் இங்க் பெர்க் என்பவருக்கு சொந்தமான மதுபான நிலையம் உள்ளது. இங்கு உலகிலேயே மிக விலை உயர்ந்த வோட்கா மதுபோத்தலை அவர் வைத்திருந்தார்.

அதன் மதிப்பு ரூ.8 கோடியே 50 லட்சமாகும். அந்த போத்தல் வெள்ளை மற்றும் தங்க நிற மஞ்சள் நிறத்தால் ஆனது. அதன் மூடியில் ரஷ்யாவின் இம்பீரியல் கழுகு முத்திரை உள்ளது. அதன் மீது விலை உயர்ந்த வைரம் பதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விலை மதிப்புமிக்க ‘வோட்கா’ மது போத்தல் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டது. முகமூடி அணிந்த மர்ம மனிதன் பூட்டை சாவி மூலம் திறந்து பாருக்குள் இருந்த வோட்கா போத்தலை திருடிச் சென்றது கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

இங்கு ஏற்கனவே பணிபுரிந்து வேலையில் இருந்து நின்றவர்கள் மூலம் சாவியை பெற்று இருக்கலாம் என பாரின் உரிமையாளர் பிரையன் இங்க்பெர்க் தெரிவித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த வர்த்தகரிடம் இருந்து கடனுக்காக இதை பெற்றதாக அவர் கூறினார்.

இந்த போத்தல் மீது இன்சூரன்ஸ் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதுகுறித்து கோபன்ஹகன் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment