250 கிலோ எடை குறைத்து கின்னஸ் சாதனை
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

250 கிலோ எடை குறைத்து கின்னஸ் சாதனை

உலகின் அதிக எடை கொண்டவர் என்ற பெருமையை பெற்ற மெக்சிகோ இளைஞர், தனது எடையை 250 கிலோ குறைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

மெக்சிகோவின் அகுவாஸ்கேலினேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜூவான் பெட்ரோ பிராங்கோ(33). இவர் 2016ஆம் ஆண்டு, 595 கிலோ எடையுடன் இருந்ததால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். அதிக எடை காரணமாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்சனை ஆகியவை அதிகமாக இருந்தது. உடனடியாக தீவிர சிகிச்சை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டார்.

இதன் காரணமாக சொந்த ஊரான கவுடலராஜாவுக்கு இடம்பெயர்ந்தார். அங்குள்ள மருத்துவமனையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொப்பையை குறைக்க மருந்து உட்கொண்டார். பின்னர் ஜூவானிற்காக பிரத்யேகமாக உடற்பயிற்சி கருவிகள் வடிவமைக்கப்பட்டன. தனது தீவிர உடற்பயிற்சியால் 250 கிலோ எடையை குறைத்துள்ளார். இன்னும் ஓராண்டில் 100 கிலோ எடையை குறைத்துவிட தீர்மானமாக உள்ளார்.

தற்போது குச்சியுடன் மெல்ல நடை பழகுகிறார். தொடர்ந்து எடையை குறைத்து, இயல்பான மனிதனாக மாற வேண்டும் என்று ஜூவான் தெரிவித்துள்ளார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment