பிரிட்டன் மாணவனின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய இலங்கை தமிழ்பெண்
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

பிரிட்டன் மாணவனின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய இலங்கை தமிழ்பெண்

பல ஆண்டுகளுக்குமுன் கப்பலில் அனுப்பப்பட்டு கொண்டெய்னர் ஒன்றில் பிரித்தானியாவுக்கு வந்த இலங்கைப்பெண் ஒருவர், 15 வயது பிரித்தானிய மாணவன் ஒருவனின் வாழ்வில் அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவர் பிரியங்கா. பல ஆண்டுகளுக்குமுன் பிரித்தானியாவுக்கு வந்தார். அப்போது அவர் மாணவர்களின் பழக்க வழக்கங்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Jack என்னும் பிரித்தானிய மாணவனைச் சந்தித்த பிரியங்கா, தனது மகனின் வயதையொத்த அவனது வாழ்க்கை முறையைக் கண்டு கவலையடைந்தார்.

பெற்றோர்கள் நீண்ட நேரம் வேலைக்குச் சென்றுவிட, நடு இரவு வரை பார்ட்டிகளும், குடியும் சிகரெட்டுமாக அவன் வாழ்ந்த வாழ்க்கை அவரை மிகவும் பாதித்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடிப்பதாக அவனை எச்சரித்த பிரியங்கா, தனக்கு பிரித்தானியா செய்த நன்மைகளை அந்நாட்டுக்கு திருப்பி அளிக்கும் வகையில் படிப்பில் மோசமாக இருந்த Jack என்னும் அந்த மாணவனை தனது மகனுடன் சேர்ந்து தனது வீட்டில் வாழச் செய்ய முடிவு செய்தார்.

வீட்டில் அவனுக்கு அவர் பல கட்டுப்பாடுகளை விதித்தார். பையன்கள் இருவரும் சீக்கிரம் தூங்கச் செல்ல வேண்டும். அதற்குமுன் தினமும் இரண்டு மணி நேரம் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

இரவில் அனைவரும் சேர்ந்து டின்னர் சாப்பிடும்போது மொபைலை நோண்டிக் கொண்டிருக்கக்கூடாது. கண்டிப்பாக வீட்டுவேலை செய்ய வேண்டும். காலை உணவை தவிர்க்கக்கூடாது என்பது போன்ற “கடுமையான” விதிகள் பின்பற்றச் செய்யப்பட்டன.

படிப்பில் மோசமாக இருந்த Jack, படிப்பில் நன்கு முன்னேறியதைக் கண்ணாரக் காண முடிந்தது. கட்டுப்பாடுகள் படிப்பிலும், சுய ஒழுக்கத்திலும் முன்னேற்றங்களை ஏற்படுத்தின.

பிரியங்காவின் மகனான Tharushஐப் போலவே கட்டுப்பாடுகளை ஒழுங்காக பின்பற்றிய Jack வகுப்பில் முதலிடத்திற்கு வர முடிந்தது. இரவில் இரண்டு மணி நேர படிப்பிற்குப் பின் சரியான நேரத்திற்கு படுக்கைக்குச் சென்றதால் இவ்வளவு நாள் பள்ளிக்கு லேட்டாகச் சென்ற Jack இப்போது சரியான நேரத்திற்கு செல்கிறான்.

பிரித்தானியாவுக்கு பிழைப்பிற்காக வந்த பிரியங்கா செய்துவரும் வாழ்வை மாற்றும் இந்த அற்புதச் செயல் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஆவணப்படமாகவும் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment