பாகிஸ்தானிற்கு செல்லுமாறு எந்த வீரருக்கும் அழுத்தம் கொடுக்கமாட்டோம்-அசங்க குருசிங்க
Current Time: GMT+5:30 Login
◄ இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேசம் உறுதிப்படுத்தவேண்டும்-சம்பந்தன் வலியுறுத்து ► ◄ வடக்கு கிழக்கில் 10 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கதன 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ► ◄ பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி விலகவில்லை-வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு ► ◄ அடுத்துவரும் சிலநாட்களில் அரசில் பாரிய மாற்றம்-அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு ► ◄ தேர்தலில் மகிந்தவின் முன்னேற்றம் குறித்து பரபரப்படைய தேவையில்லை-சம்பந்தன் ►

பாகிஸ்தானிற்கு செல்லுமாறு எந்த வீரருக்கும் அழுத்தம் கொடுக்கமாட்டோம்-அசங்க குருசிங்க

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் அழுத்தங்களை கொடுக்கப்போவதில்லை என இலங்கை அணியின் முகா மையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாக அவதானித்த பின்னரே அந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்த முடிவை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அனுமதி கிடைக்கின்றதா என்பதை பொறுத்திருந்து பார்க்கப்போகின்றோம் தற்போது உலக அணியொன்று பாகிஸ்தானில் விளையாடி வருகின்றது. அந்த போட்டிகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதை அவதானிப்போம் லாகூரில் காணப்படும் பாதுகாப்பு நிலவரம் குறித்து எங்கள் நிபுணர் ஒருவரை அனுப்பி அவதானிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் இதனை நான் பாகிஸ்தானிற்கு நன்றி தெரிவிக்கும் நடவடிக்கையாக கருதுகிறேன் 1996 இல் இலங்கை இவ்வாறான நிலையை எதி ர்கொண்டவேளை அவர்கள் எங்களிற்கு பெரும் உதவி புரிந்துள்ளனர் என அசங்ககுருசிங்க தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள முடியுமென்றால் அது மிகப்பெரும் விடயமாக அமையும். ஆனால் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எந்த வீரரிற்கும் அழுத்தங்களை கொடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment