இந்திய அணியின் பலமான துடுப்பாட்டத்தால் அச்சத்தில் உள்ள ஆஸி அணி
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

இந்திய அணியின் பலமான துடுப்பாட்டத்தால் அச்சத்தில் உள்ள ஆஸி அணி

இந்திய அணியின் சிறப்பான துடுப்பாட்ட வரிசையை பார்த்தால் தான் கொஞ்சம் அச்சமாக உள்ளது என அவுஸ்திரேலிய வீரர் ஸ்டோனிஸ் தெரிவித்து ள்ளார்.

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வரும் 17ல் சென்னையில் தொடங்கவுள்ளது. இதற்காக அவுஸ்திரேலிய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு ள்ளது.

இந்நிலையில் நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய பிரசிடெண்ட் லெவன் அணியை அவுஸ்திரேலிய அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எனினும், இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை பயமுறுத்தும் விதத்தில் உள்ளதாக, அவுஸ்திரேலிய வீரர் ஸ்டோனிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டோனிஸ் கூறுகையில்,’இந்திய அணிக்கு எதிரான தொடரில் அதிக ஓட்டங்கள் சேர்க்க வேண்டியது அவசியம். அதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வரிசை மிகவும் பயமுறுத்தும் விதத்தில் உள்ளது. இந்திய அணியில் அனைவரும் மிகவும் அபாயகரமானவர்கள். ஒவ்வொ ருவரும் சிறந்த வீரர்கள். தலைசிறந்த வீரர்கள் என்றார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment