பாடசாலை மட்ட குத்துசண்டைப் போட்டியில் முல்லை வித்தியானந்தாக் கல்லூரி சாதனை
Current Time: GMT+5:30 Login
◄ இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேசம் உறுதிப்படுத்தவேண்டும்-சம்பந்தன் வலியுறுத்து ► ◄ வடக்கு கிழக்கில் 10 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கதன 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ► ◄ பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி விலகவில்லை-வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு ► ◄ அடுத்துவரும் சிலநாட்களில் அரசில் பாரிய மாற்றம்-அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு ► ◄ தேர்தலில் மகிந்தவின் முன்னேற்றம் குறித்து பரபரப்படைய தேவையில்லை-சம்பந்தன் ►

பாடசாலை மட்ட குத்துசண்டைப் போட்டியில் முல்லை வித்தியானந்தாக் கல்லூரி சாதனை

பாடசாலை குத்துச்சண்டை சங்கத்தினரால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 48 ஆவது டி.பி ஜெயா ஞாபகார்த்த தேசிய குத்து ச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி நான்கு தங்க பதக்கங்களை கைப்பற்றி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது.

நாடு பூராகவும் 48 பாடசாலைகளை சேர்ந்த 267 வீரர்கள் பங்குபற்றிய 16 பிரிவுகளைக் கொண்ட இந்த தேசிய போட்டித்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்ப மாகி தொடர்ந்து நான்கு நாட்கள் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் குத்துச்சண்டை திடலில் இடம்பெற்றுவந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக இந்த போட்டி இடம்பெற்றதோடு முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 6 பாடசாலைகள் கலந்துகொண்டிருந்தன.

இதில் முள்ளியவளை வித்தியானந்தாக்கல்லூரியை சேர்ந்த வி.சாம்சன் 35 கிலோ - 37 கிலோ எடைப்பிரிவில் தங்கம், 52கிலோ -56கிலோ எடைப்பிரிவில் எம்.தனுஜன் தங்கம், 56கிலோ - 60கிலோ எடைப்பிரிவில் வை.ஜனனன் தங்கம், 60 கிலோ - 64 கிலோ எடைப்பிரிவில் வை.கிரிதுரன் தங்கம் என நான்கு தங்கப்பதக்கங்களை சுவீகரித்து தேசிய சாதனையை நிலை நாட்டினர்.

இந்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைசேர்ந்த முத்தையன்கட்டு வலதுகரை (அ. த. க) பாடசாலை வீரர் ஏ .தமிழரசன் 43 கிலோ - 45 கிலோ எடை ப்பிரிவில் தங்கப்பதக்கத்தினையும் முத்தையன்கட்டு இடதுகரை (அ. த.க) பாடசாலை வீரர் பி.ரூபன் வெள்ளிப் பதக்கத்தினையும் பெற்றுக்கொ ண்டனர்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment