தென்னாபிரிக்காவின் மூவகை கிரிக்கெட்டிற்கும் பிளெசிஸ் தலைவராக நியமனம்
Current Time: GMT+5:30 Login
◄ எவரையும் உதாசீனம் செய்யவில்லை அனைவருடனும் பேசத் தயார்-சம்பந்தன் ► ◄ காணாமற் போனோர் பணியகத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க ஆலோசனை ► ◄ கேப்பாபுலவில் மக்களின் காணிகளிலிருந்து வெளியேறுகிறது இராணுவம் ► ◄ மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வினால் பிரிவினைவாதம் ஏற்படாது-கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ► ◄ சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்ப உதவி வழங்கப்படும்-ஜனாதிபதியிடம் ஐ.நா செயலர் உறுதியளிப்பு ►

தென்னாபிரிக்காவின் மூவகை கிரிக்கெட்டிற்கும் பிளெசிஸ் தலைவராக நியமனம்

மூவகை சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் தென்னாபி­ரிக்க கிரிக்கெட் அணித் தலை­வ­ராக டு பிளெசிஸ் பதவி வகிக்­க­வுள்ளார். ஏ. பி. டி வில்­லியர்ஸ் விலகியதை தொடர்ந்து சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கடெ் அணியின் தலை­வ­ராக டு பிளெசிஸ் நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து இது உறு­தி­யா­கி­யுள்­ளது.

ஏற்­க­னவே தென்னாபி­ரிக்­காவின் டெஸ்ட் அணித் தலை­வ­ராக கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்­திலும் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக 2013 பெப்­ர­வ­ரி­யி­லி­ருந்தும் டு பிளெசிஸ் பதவி விகித்­து­வ­ரு­கின்றார்.

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் தென்னாபி­ரிக்க அணியைத் தலை­வ­ராக டு பிளெசிஸ் வழி­ந­டத்­த­வுள்ளார். இதற்கு அமைய பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான மூவகை தொடர்­களே அவர் முதல் தட­வை­யாக தென்னாபி­ரிக்­காவின் தலை­வ­ராக விளை­யா­ட­வுள்ள தொடர்­க­ளாக அமை­ய­வுள்­ளன.

இம் மாத பிற்­ப­கு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்ள இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்­டி­கள், மூன்று சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­கள், மூன்று சர்­வ­தேச ரி 20 கிரிக்கெட் போட்­டிகள் இடம்­பெ­ற­வுள்­ளன.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment