டொன் பிராட்மேனின் சாதனையை தகர்த்த ஆப்கன் இளம் வீரர்
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

டொன் பிராட்மேனின் சாதனையை தகர்த்த ஆப்கன் இளம் வீரர்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டொன் பிராட்மேனின் சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் பஹீர் ஷா தகர்த்துள்ளதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பஹீர் ஷா (18). இப்போதைய 19 வயது கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

பஹீர் ஷா இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 12 இனிங்சில் விளையாடி 1096 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 3 போட்டிகளில் ஆட்டமிழப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 5 சதங்களும், 2 அரை சதங்களும் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ஓட்டம் 303. இவரது சராசரி 121.77. இது அவுஸ்திரேலிய வீரர் சேர் டொன் பிராட்மேனின் சராசரியான 95.14-ஐ விட அதிகம்.

இதையடுத்து, ஆப்கன் வீரர் பஹீர் ஷா டொன் பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார். இவருக்கு பல்வேறு வீரர்களும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பஹீர் ஷா கூறுகையில், இது எனக்கு மறக்க முடியாத தருணம். எனக்கு ஆதரவுடன் உறுதுணையாக இருந்து வரும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது பயிற்சியாளருக்கும் நன்றி. நான் எப்போதும் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment