ரபாடாவிற்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

ரபாடாவிற்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரபாடாவின் துல்லியமான பந்துவீச்சால் தென்னாபிரிக்கா அபாரமாக வெற்றி பெற்றது.

இத்தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் ரபாடாவின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாபிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதித்துள்ளது.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க வீரர் ரபாடா மிக சிறப்பாக பந்துவீசி (5+6) 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்த போட்டியில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம் செய்த போது, முதல் இனிங்ஸில் ஆஸி.அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை, ரபாடா எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழப்பு செய்தபோது மிக ஆக்ரோஷமாக அவர் தோளை உரசி சென்று கத்தினார்.

இரண்டாவது இனிங்ஸின் போது டேவிட் வோர்னரை ஆட்டமிழக்கி ஆக்ரோஷமாக அவரை வெளியேற கத்தினார்.

ஸ்மித் தோள் பட்டையை உரசியதும், வோர்னரை வெளியேற கத்தியது ஆகியவை ஐசிசி விதிமுறைப்படி தண்டனைக்குரிய செயலாகும். அதனால் முறையே 3 மற்றும் 1 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டன.

பொதுவாக 3 டிமெரிட் புள்ளிகள் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது இரு ஒருநாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். ஆனால் ரபாடா 24 மாதத்தில் மொத்தம் 9 டிமெரிட் புள்ளிகள் பெற்றுள்ளார். இதனால் அவரின் தண்டனை இரட்டிப்பாகின்றது.

இதனால் அவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment