ஷமிக்கு ஆதரவு கரம் நீட்டும் டோனி
Current Time: GMT+5:30 Login
◄ அரசுடன் தொடர்வதா இல்லையா? சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோர முடிவு ► ◄ அவசரகால சட்டம் நீக்கம் ► ◄ ஜெனிவா தீர்மான நடைமுறைக்கு மாற்றுவழி -அமெரிக்காவிடம் வலியுறுத்த வோஷிங்டன் பறந்தார் சுமந்திரன் ► ◄ ஐ.நா மனித உரிமை ஆணையாளரை இலங்கை பிரதிநிதிகள் சந்திக்கும் முயற்சி தோல்வி ► ◄ 2015 ஆம் ஆண்டு பிரேரணையை நிறைவேற்ற இலங்கை எதனையும் செய்யவில்லை-யஸ்மின் சூக்கா குற்றச்சாட்டு ►

ஷமிக்கு ஆதரவு கரம் நீட்டும் டோனி

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி அளித்த புகாரால் மிகவும் சோர்ந்து போய் உள்ள ஷமிக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் தோனி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிகெட் வீரர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பில் உள்ளார், என்னை கொடுமைப்படுத்துகிறார், ஆட்டநிரிணய சதியில் ஈடுபட்டார், தன்னை கொலை செய்ய முயற்சி செய்தார் என பல அடுக்கடுக்கான புகாரை கணவர் மீது சுமத்தியுள்ளார் அவரது மனைவி ஹாசின் ஜஹான். இதனால் அவர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார். தன் மனைவியை நன்கு விசாரித்தால் நான் குற்றமற்றவன் என தெரியும் என தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் யாரும் ஷமிக்கு ஆதரவாக இல்லாத நிலையில் தோனி ஷமிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

தோனி கூறுகையில், “எனக்கு தெரிந்தவரை ஷமி மிகவும் பண்பானவர். அவர் மனைவி மற்றும் நாட்டை ஏமாற்றி இருக்க மாட்டார். இது அவரது குடும்ப விஷயம். இதற்கு மேல் நான் எதுவும் கூறக்கூடாது.” என்றார்.

இதனிடையே ஷமியுடன் இனி எந்த சமரசமும் இல்லை என அவரது மனைவி ஹாசின் ஜஹான் தெரிவித்துள்ளார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment