சென்னை அணிக்கான தென்னாபிரிக்க வீரர் நாடு திரும்பினார்
Current Time: GMT+5:30 Login
◄ தென்மராட்சியில் ரவுடி கும்பல் விடிய விடிய அட்டகாசம்-மக்கள் அச்சத்தில் ► ◄ வடக்கு,கிழக்கில் அரச நிர்வாகம் முடக்கம்-சுமந்திரன் எச்சரிக்கை ► ◄ இரணைதீவை விடுவிக்க கோரி பேரணி ► ◄ அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்க ஜனாதிபதி வலியுறுத்து ► ◄ யாழில். மக்களின் உடம்பில் ஓடுவது சிங்கள குருதியாம் ►

சென்னை அணிக்கான தென்னாபிரிக்க வீரர் நாடு திரும்பினார்

ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த, தென்னாபிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி நாடு திரும்பியுள்ளார்.

அவரின் தந்தை இயற்கை எய்தியதையடுத்தே, அவர் நேற்று அவசரமாக நாடு திரும்பியதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடப்பு தொடரின் மூலம் முதல்முறையாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த லுங்கி இங்கிடி, ஒருபோட்டியில் கூட விளையாடமல் நாடு திரும்பியிருப்பது இரசிகர்களை கடும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

எனினும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சுமார் இரண்டு மாதங்கள் நடக்கும் என்பதால், எதிர்வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய அணிக்கெதிரான அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலகையே திரும்பி பார்க்க வைத்த லுங்கி இங்கிடியை, நடப்பு தொடரில் சென்னை அணி, இந்திய மதிப்பில் 50 இலட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment