காயத்தால் விலகல்
Current Time: GMT+5:30 Login
◄ தென்மராட்சியில் ரவுடி கும்பல் விடிய விடிய அட்டகாசம்-மக்கள் அச்சத்தில் ► ◄ வடக்கு,கிழக்கில் அரச நிர்வாகம் முடக்கம்-சுமந்திரன் எச்சரிக்கை ► ◄ இரணைதீவை விடுவிக்க கோரி பேரணி ► ◄ அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்க ஜனாதிபதி வலியுறுத்து ► ◄ யாழில். மக்களின் உடம்பில் ஓடுவது சிங்கள குருதியாம் ►

காயத்தால் விலகல்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோடி, ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாக, அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதேவேளை அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்வதிலும் தாம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக, அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 19வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கமலேஷ் நாகர்கோடியை, கொல்கத்தா அணி நிர்வாகம் இந்திய மதிப்பில், 3.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment