உடலை ஊடுருவி நோயின் தன்மையை சொல்லும் புதிய கமரா கண்டுபிடிப்பு
Current Time: GMT+5:30 Login
◄ எவரையும் உதாசீனம் செய்யவில்லை அனைவருடனும் பேசத் தயார்-சம்பந்தன் ► ◄ காணாமற் போனோர் பணியகத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க ஆலோசனை ► ◄ கேப்பாபுலவில் மக்களின் காணிகளிலிருந்து வெளியேறுகிறது இராணுவம் ► ◄ மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வினால் பிரிவினைவாதம் ஏற்படாது-கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ► ◄ சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்ப உதவி வழங்கப்படும்-ஜனாதிபதியிடம் ஐ.நா செயலர் உறுதியளிப்பு ►

உடலை ஊடுருவி நோயின் தன்மையை சொல்லும் புதிய கமரா கண்டுபிடிப்பு

உடலை ஊடுருவிப் பார்த்து நோயின் தன்மையை சொல்லும் புதிய கமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள எடின்பேர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விஞ்ஞானி கேவ் தலிவால் தலைமையிலான குழு இதை கண்டுபிடித்துள்ளது. தனது கண்டுபிடிப்பு பற்றி அவர் கூறும்போது, ‘உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற மருத்துவ சாதனங்களை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், எண்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்துக்கு நகர்த்த எக்ஸ்ரேவைத்தான் நாட வேண்டியுள்ளது. ஆனால், இந்த கமரா, எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாக காட்டி விடும். அதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிலிக்கான் சிப், கமராவில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இனி எக்ஸ்ரே மற்றும் ஸ்கானுக்கு அவசியம் இருக்காது’ என்றார்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment