மிகக்குறைந்த விலையில் ஆளில்லா விமானங்கள் உருவாக்கம்
Current Time: GMT+5:30 Login
◄ இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேசம் உறுதிப்படுத்தவேண்டும்-சம்பந்தன் வலியுறுத்து ► ◄ வடக்கு கிழக்கில் 10 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கதன 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ► ◄ பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி விலகவில்லை-வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு ► ◄ அடுத்துவரும் சிலநாட்களில் அரசில் பாரிய மாற்றம்-அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு ► ◄ தேர்தலில் மகிந்தவின் முன்னேற்றம் குறித்து பரபரப்படைய தேவையில்லை-சம்பந்தன் ►

மிகக்குறைந்த விலையில் ஆளில்லா விமானங்கள் உருவாக்கம்

அண்ட்ரொய்ட் சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது 2000 ரூபா செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது நமது வாழ்வில் முக்கிய இடம்பிடித்து வருகின்றன, வீடியோ மற்றும் சினிமா படம் எடுக்கவும், போட்டோக்கள் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு பலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர், இருந்தும் ஆளில்லா விமான ங்களில் கமராக்கள் பொருத்தப்படுவதால் அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்நிலையில் அண்ட்ரொய்ட் சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது 2000 ரூபா செலவில் ஆளில்லா விமான ங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

அது மிகச்சிறிய அளவிலானது, இதை உள்ளங்கையில் அடக்கமாக வைத்துக்கொள்ள முடியும், இதில் 0.3 எம்.பி. திறனுள்ள கமரா பொரு த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கலாம், இதை புற்தரையிலும் தரையிறக்கலாம். இதில் உள்ள பற்றறியை 30 நிமிடத்தில் முழுவ துமாக சார்ஜ் செய்ய முடியும்.

'


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment