மிகப்பெரிய சூரிய பிழம்பைக் கண்ட விஞ்ஞானிகள்
Current Time: GMT+5:30 Login
◄ இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேசம் உறுதிப்படுத்தவேண்டும்-சம்பந்தன் வலியுறுத்து ► ◄ வடக்கு கிழக்கில் 10 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கதன 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ► ◄ பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி விலகவில்லை-வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு ► ◄ அடுத்துவரும் சிலநாட்களில் அரசில் பாரிய மாற்றம்-அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு ► ◄ தேர்தலில் மகிந்தவின் முன்னேற்றம் குறித்து பரபரப்படைய தேவையில்லை-சம்பந்தன் ►

மிகப்பெரிய சூரிய பிழம்பைக் கண்ட விஞ்ஞானிகள்

கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சூரியப்பிழம்பைக் கண்ட விஞ்ஞானிகள் அது குறித்த நுண் விபரங்களைத் திரட்டியுள்ளனர்.

1996 ஆம் ஆண்டு முதல் சூரியப்பிழம்புகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமானது.

அன்று முதல் ஏற்பட்ட சூரியப்பிழம்புகளில் இது 8 ஆவது மிகப்பெரிய சூரியப்பிழம்பு என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மிகப்பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டதால், கதிர்வீச்சு நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆனால், இது பூமியின் தற்காப்பு அமைப்புகளால் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதல்ல.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமும் தாக்கத்தை ஏற்படுத்தாமைக்கு மற்றொரு காரணமாகும்.

இந்த சூரியப்பிழம்பு இம்மாதம் 6 ஆம் திகதி எதிர்பாராத விதமாக தோன்றியுள்ளது.

இந்த மிகப்பெரிய பிழம்பு 48 மணிநேரம் விஞ்ஞானிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய சூரியப்பிழம்புகள் அல்லது வெடிப்புகள் பொதுவாக 100 கோடி ஹைட்ரஜன் வெடிகுண்டுகளின் ஆற்றலுக்கு சமமானவை.

சூரியனின் மேற்பரப்பிலிருந்து பிளாஸ்மாவை விநாடிக்கு 2,000 கிலோமீட்டர் வேகத்தில் வெளியேற்றக்கூடியது.

இது Coronal Mass Ejections என்று அழைக்கப்படுகிறது.

”விண்வெளித் தட்பவெப்பம்” என இத்தகைய சக்திவாய்ந்த நிகழ்வுகள் வர்ணிக்கப்படுகின்றன.

இதனால் செயற்கைக்கோள்கள், GPS சிக்னல்கள் பாதிப்படையலாம்.

லா பால்மாவில் உள்ள ஸ்வீடன் சூரிய தொலைநோக்கி மூலம் இந்த அரிய நிகழ்வின் விபரங்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளனர்.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment