புதியதை விற்க பழையதின் இயங்குதிறனை குறைத்துள்ள அப்பிள்
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

புதியதை விற்க பழையதின் இயங்குதிறனை குறைத்துள்ள அப்பிள்

iPhone களின் பயன்பாட்டுக்காலத்தை அதிகரிக்கும் போது அதன் பற்றறி திறன் அதிகளவில் செயற்படுவதைத் தவிர்க்கும் வகையில் iPhone இன் இயக்க வேகத்தைக் குறைப்பதை அப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

புதிய iPhone-களை வாங்குவதைத் தூண்டுவதற்காக அப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைக்கிறது என்ற சந்தேகம் நீண்டகாலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்நிலையில், பழைய iPhone-களில் பற்றறியின் திறன் குறைவதால் அதற்கேற்றவாறு அதன் இயக்க வேகத்தைக் குறைப்பதாக அப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயமானது ‘ரெட்டிட்’ என்ற சமூக இணையத்தளத்தில் பயனர் ஒருவர் தனது iPhone-இன் செயற்பாட்டு சோதனை முடிவுகளை வெளியிட்டவுடனே பலருக்குத் தெரியவந்தது.

அதாவது, ஐபோன் 6S மொடலை பயன்படுத்தி வந்த அவருடைய திறன்பேசியின் இயக்க வேகம் காலப்போக்கில் குறைந்துவிட்டது. ஆனால், அதன் பற்றறியை புதிதாக மாற்றியவுடன் மீண்டும் அதன் வேகம் அதிகரித்துக் காணப்பட்டது.

”நான் எனது சகோதரரின் iPhone 6 பிளஸ் மொடலை பயன்படுத்தியபோது அது என் மொடலைவிட வேகமாக செயற்படுவதை அறிந்தபோது இதில் ஏதோ பிழை இருப்பதுபோல் தோன்றியது” என்று ரெட்டிட்டில் அவர் பதிவிட்டுள்ளார்.

வெவ்வேறு அப்பிள் இயங்குதள பதிப்புகளில் இயங்கும் பல iPhone-களைக் கொண்டு சோதனையை நடத்திய தொழில்நுட்ப இணையத்தளமான ஜீக்பென்ச், சில iPhone-களின் இயக்க வேகம் வேண்டுமென்றே குறைக்கப்படுவதைக் கண்டறிந்துள்ளது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment