அதிவேகமாக செல்லும் ரொக்கெட்டை செலுத்தி ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் சாதனை
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

அதிவேகமாக செல்லும் ரொக்கெட்டை செலுத்தி ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் சாதனை

அதிக வேகத்தில் செல்லும் உலகின் மிக சக்திவாய்ந்த பெல்கான் ரொக்கெட்டை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் புதிய ரக ரொக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவை உலகத்தரத்தில் உயர்த்தியதில் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகித்து உள்ளது.

உலகின் மிக சக்தி வாய்ந்த அதிக வேகத்தில் செல்லும் புதிய ரக ஃபெல்கான் ரொக்கெட்டை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. ரொக்கெட்டில் உள்ள மூன்று உயர்த்திகளில் மொத்தம் 27 என்ஜின்கள் உள்ளன. இந்த என்ஜின்கள் அனைத்தும் மொத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ரொக்கெட் மற்றய ரொக்கெட்களை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அது 1 லட்சத்து 40 ஆயிரம் பவுண்ட் எடையுடன் பூமி வட்டப்பாதையை சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிரகத்திற்கு 40 ஆயிரம் பவுண்ட் எடையுடன் சுற்றி வரும் திறன் கொண்டது.

இந்நிலையில், நேற்று பெல்கான் ரொக்கெட்டை புளோரிடா கடல் பகுதியில் உள்ள விண்வெளிதளத்தில் இருந்து விண்ணிற்கு வெற்றிகரமாக செலுத்தினர். பெரும் புகையுடன் சென்ற ரொக்கெட்டை ஏராளாமானோர் கண்டு ரசித்தனர். தற்சமயம் ரொக்கெட் பூமி வட்டப்பாதையில் வெற்றிகரமாக சுற்றி வருகிறது. பெல்கான் ரொக்கெட் போன்று மிக சக்தி வாய்ந்த ரொக்கெட்கள் வரிசையாக வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment