மண்புழு வடிவில் ரோபோ -ஹவார்ட் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் சாதனை
Current Time: GMT+5:30 Login
◄ அரசுடன் தொடர்வதா இல்லையா? சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோர முடிவு ► ◄ அவசரகால சட்டம் நீக்கம் ► ◄ ஜெனிவா தீர்மான நடைமுறைக்கு மாற்றுவழி -அமெரிக்காவிடம் வலியுறுத்த வோஷிங்டன் பறந்தார் சுமந்திரன் ► ◄ ஐ.நா மனித உரிமை ஆணையாளரை இலங்கை பிரதிநிதிகள் சந்திக்கும் முயற்சி தோல்வி ► ◄ 2015 ஆம் ஆண்டு பிரேரணையை நிறைவேற்ற இலங்கை எதனையும் செய்யவில்லை-யஸ்மின் சூக்கா குற்றச்சாட்டு ►

மண்புழு வடிவில் ரோபோ -ஹவார்ட் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் சாதனை

ஹவார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மண்புழு வடிவில் ரோபோவை தயாரித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஹவார்ட் பல்கலைக்கழகம் உலக அளவில் முதன்மையாக மதிப்பிடப்படுகிறது. இந்த பல்கலையைச் சேர்ந்த அகமது ரப்சஞ்சனி என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழு ஜப்பானிய காகிதக் கலையைப் பின்பற்றி ரோபோ ஒன்றை தயாரித்துள்ளது.

ஜப்பானில் காகிதங்களில் கலைப் பொருட்களைத் தயாரிக்கும் முறை கிரிகாமி என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் காகிதங்களை பல்வேறு வடிவங்களில் வெட்டி பாம்புத்தோல் போன்ற அமைப்பை உருவாக்கினர். பின், சிலிக்கான் ரப்பர் உறை மூலம் போர்த்தி அதில் காற்றழுத்த பம்ப், பற்றறி மற்றும் சென்சார் ஆகியவற்றைப் பொருத்தியுள்ளனர்.

மண்புழுவைப் போல இருக்கும் இந்த ரோபோ பாம்பு நகர்வதைப் போல நகர்ந்து செல்லும். ரோபோக்கள் வடிவமைப்பில் இது புதிய அணுகுமுறையாக கருதப்படுகிறது.


நண்பர்களுக்கு பகிர...

Comment(s)

No Comments available.

Add New Comment