Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேசம் உறுதிப்படுத்தவேண்டும்-சம்பந்தன் வலியுறுத்து ► ◄ வடக்கு கிழக்கில் 10 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கதன 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ► ◄ பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி விலகவில்லை-வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு ► ◄ அடுத்துவரும் சிலநாட்களில் அரசில் பாரிய மாற்றம்-அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு ► ◄ தேர்தலில் மகிந்தவின் முன்னேற்றம் குறித்து பரபரப்படைய தேவையில்லை-சம்பந்தன் ►

லலித் ஜயசிங்கவிற்கு பிணை

Jaffna | 2017-09-13 : 12:45:09

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்ல உதவியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டிருந்த சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க இன்றையதினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, 3 லட்சம் ரொக்க பிணையிலும், 5 லட்சம் ரூபா பெறுமதியான 4 சரீர பிணையிலும், செல்ல அவருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழ ங்கியுள்ளது.

அத்துடன், அவரது கடவுச்சீட்டை முடக்கவும், வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமைகளில் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




Comment(s)

No Comments available.

Add New Comment