Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ பிணைமுறி மோசடி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு ► ◄ தமிழர்கள் விரும்பாத தீர்வை அவர்கள் மீது திணிக்கமுடியாது-முதல்வர் விக்கி தெரிவிப்பு ► ◄ உயர்நீதிமன்றிடம் ஏன் விளக்கம் கோரினேன்? அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம் ► ◄ அமைச்சரவையிலிருந்து வெளிநடப்பு செய்த ஜனாதிபதி-முற்றுகிறதா முறுகல்? ► ◄ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளராக கோத்தா ►

யார் திருடன்? மக்கள் அறிவர் என்கிறார் ஜனாதிபதி

Colombo | 2018-01-11 : 08:23:49

கொழும்பில் பிற்பொக்கட் அடிக்கும் திருடனும் மக்களுடன் சேர்ந்து திருடன் திருடன் என கூறிக்கொண்டு ஓடுவதை போன்றே நேற்று பாராளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் திருடன் திருடன் என கூறிக்கொண்டு சண்டையிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவர்கள் இரண்டு தரப்பிலும் யார் உண்மையான திருடன் என்பதனை தெரிந்துக்கொள்ள முடியாதளவுக்கு இருவரும் சண்டையிட்டுள்ளதாகவும் ஆனால் உண்மையான திருடனை மக்கள் அறிவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் அநுராதபுரம் நகரில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கூடிய போது இரண்டு தரப்பிலும் இருப்பவர்கள் மாறி மாறி திருடர்கள் என கத்திக் கொண்டார்கள். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அனைவரும் கட்சியின் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அங்கு பாராளுமன்றத்திலும் இரண்டு தரப்பினரும் திருடர்கள் என ஒருவரை ஒருவர் கூறிக்கொண்டு யார் திருடன் யார் திருடன் இல்லை என தெரிந்துக்கொள்ள முடியாதளவுக்கு கூச்சலிட்டு அடித்துக்கொண்டுள்ளனர். கொழும்பு கோட்டை பகுதியில் ஒருகாலத்தில் அதிகமான பிறபொக்கட் காரர்கள் இருந்தார்கள். அவர்கள் அப்பாவி மக்களின் பணப் பைகளை எடுத்துக்கொண்டு ஓடுவார்கள். அப்போது பணப்பையின் உரிமையாளர் எனது பணத்தை எடுத்துக்கொண்டு ஓடுகின்றான். திருடன் திருடன் என கத்திக்கொண்டு ஓடுவார்.

 

அப்போது மக்களும் ஓடுவார். அப்போது திருடனும் திருடன் திருடன் என கூறிக்கொண்டு ஓடுவான். அதுதான் இன்று அரசியலில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையால் திருடன் யார் திருடன் அல்லாதது யார் என்பதனை மக்கள் அறிவார்கள். எமக்கு ஒழுக்கமுள்ள தூய்மையான அரசியல் , உள்ளூராட்சி சபை , பாராளுமன்றம் என்பன அவசியமாக இருக்கின்றது. இதற்காக பெப்ரவரி 10ஆம் திகதி எங்களுக்கு வாக்களித்து அதன் பொறுப்பை நிறைவேற்றுங்கள். நாங்கள் சிறந்த கிராமம் , நாடு , சிறந்த மக்கள் , ஊழல் அற்ற சமூகத்தை உருவாக்குவோம். அத்துடன் நாட்டை நேசிக்கும் நாட்டின் வளங்களை பாதுகாக்கும் பிரிவினரை உருவாக்குவேன். என்பதனை நான் கட்சியின் தலைவர் என்ற வகையில் பொறுப்பேற்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்.




Comment(s)

No Comments available.

Add New Comment