Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல்? ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►

வேலைப்பளு காரணமாக ஜெனிவா செல்லாத முதல்வர் விக்கி

Vanni | 2018-03-13 : 11:54:01

வேலைப்பளு காரணமாக நான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை, இருப்பினும் எங்களது உறுப்பினர்கள் சகல விடயங்கைளயும் அங்கு எடுத்துரைப்பார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்க கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அத்தோடு ஜெனீவாவுக்கு அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

வேறு யார் யார் செல்கின்றார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. அனைத்து விடயங்களையும் எங்களுடைய பிரதிநிதிகள் அங்கு எடுத்துரைப்பார்கள் எனத் தெரிவித்தார்.

சிவநகர் மூத்தோர் சங்க தலைவர் ரகுபதி தலைமையில் இடம்பெற்ற மூத்த பிரஜைகள் சங்கத்தின் கட்டடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கலந்து கொண்டதுடன், வைத்தியர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், கிராமத்தின் மூத்தோர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




Comment(s)

No Comments available.

Add New Comment