Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..
Current Time: GMT+5:30 Login
◄ தென்மராட்சியில் ரவுடி கும்பல் விடிய விடிய அட்டகாசம்-மக்கள் அச்சத்தில் ► ◄ வடக்கு,கிழக்கில் அரச நிர்வாகம் முடக்கம்-சுமந்திரன் எச்சரிக்கை ► ◄ இரணைதீவை விடுவிக்க கோரி பேரணி ► ◄ அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்க ஜனாதிபதி வலியுறுத்து ► ◄ யாழில். மக்களின் உடம்பில் ஓடுவது சிங்கள குருதியாம் ►

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றியதன் மூலம் இராணுவத்துக்கு 161 மில்.டொலர் வருமானம்

Colombo | 2018-04-16 : 10:00:11

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைகளில் பணியாற்றும் படையினர் மூலம், 2004ஆம் ஆண்டு தொடக்கம், ஆண்டு தோறும் குறைந்தது 2.5 மில்லியன் டொலர் வருமானம் பெறப்படுகிறது.

இதுவரை இராணுவத்தைச் சேர்ந்த, 18,179 படையினர் வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைக்காக பணியாற்றியுள்ளனர்.

தற்போது, லெபனான், தென்சூடான்., மாலி, அபேயி, நியூயோர்க், மத்திய ஆபிரிக்க குடியரசு, மேற்கு சகாரா, உள்ளிட்ட இடங்களில் இராணுவத்தினர் ஐ.நா அமைதிப்படையில் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.




Comment(s)

No Comments available.

Add New Comment